யுவனும் இல்லை… அனிருத்தும் இல்லை… விஷ்ணுவர்தன் பட வாய்ப்பைக் கைப்பற்றிய ஜிப்ரான்!

புதன், 2 ஜூன் 2021 (12:34 IST)
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் அவருடைய மருமகனும் அதர்வா முரளி சகோதரருமான ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்க இருப்பதாகவும் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் விஷ்ணுவர்தன் இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

எப்போதும் விஷ்ணுவர்தனின் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைப்பார். ஆனால் இந்த படத்துக்கு முதல் முதலாக அனிருத் இசையமைக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். விஷ்ணுவர்தன் படத்துக்கு முதல் முதலாக யுவன் இல்லாத ஒருவர் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்