நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் அளித்த பதிவு ஒன்றில் தனது ஜிம் மாஸ்டர் ஜீவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். பிறந்தநாள் கேக் வெட்டி அந்த கேக்கை அவருடைய முகத்தில் பூசியவாறு உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ள அவர் பொதுவாக என்னை வேலை வாங்குபவர்களை எனக்கு பிடிக்காது, ஆனால் உங்களை மட்டும் உங்களை எனக்கு பிடித்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக அமையும் என்று வாழ்த்து கூறியுள்ளார்
நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 உள்பட சுமார் பத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஒரு சில படங்களில் நடிப்பதற்கு அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டு வருவதால் கோலிவுட் திரையுலகில் பிஸியான நடிகைகளில் பிரியா பவானி சங்கர் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது