என் வரம்,சாபம் இதுவே ; டிவிட் போட்ட காயத்ரி ; வச்சு செய்யும் நெட்டிசன்கள்

வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (14:30 IST)
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை காயத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் தினமும் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்.


 

 
அவர் மீதுள்ள கோபத்தில், அவர் போடும் ஒவ்வொரு டிவிட்டையும் நெட்டிசன்கள் கலாய்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 


 

 
இந்நிலையில் நேற்று அவர் ஒரு தத்துவம் பொதிந்த ஒரு டிவிட்டை அவர் பதிவு செய்திருந்தார். அதில் “இந்த அசிங்கமான உலகில் நான் உணர்வுபூர்வமான ஆத்மாவுடன் பிறந்துள்ளேன். நான் எப்போதும் மற்றவர்களை விட வித்தியாசமாகவும், ஆழமாகவும் என்னை உணர்கிறேன். அதுவே என்னுடைய வரமாகவும், சாபமாகவும் இருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.


 

 
இதைக் கண்ட நெட்டிசன்கள் சகட்டு மேனிக்கு அவரை கிண்டலடித்து வருகின்றனர்.







வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்