மணக்கோலத்தில் மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக்!

திங்கள், 28 நவம்பர் 2022 (14:21 IST)
நடிகர்கள் மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் இன்று சென்னையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் இளம்  நடிகர் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த  நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் இருவருமே அந்த தகவலை உறுதி செய்தனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படத்தை- இருவரும் மணக்கோலத்தில் – வெளியிட அது வைரல் ஆகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்