சாய் பல்லவி நடிக்கும் ‘கார்கி’ டிரைலரை வெளியிடும் பிரபலங்கள்!

வியாழன், 7 ஜூலை 2022 (15:02 IST)
சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் கார்கி திரைப்படம் ஜூலை 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த விராட பர்வம் திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள ‘கார்கி’ படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ரிலீஸாக உள்ள இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தை தற்போது சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.

இதுபற்றி டிவிட்டரில் அறிவித்த சூர்யா சாய்பல்லவி உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இன்று மாலை இந்த படத்தின் டிரைலரை நடிகர்கள் சூர்யா மற்றும் ஆர்யா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் வெளியிட உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்