காதலர் தினத்தில் வெளியாகும் பென்சில் பாடல்கள்

வியாழன், 22 ஜனவரி 2015 (14:13 IST)
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக ஒப்பந்தமாகி முதலில் நடிக்க ஆரம்பித்த படம், பென்சில். ஸ்ரீதிவ்யா ஹீரோயின். ஜீ.வி.பிரகாஷ் இதில் 12 -ஆம் வகுப்பு மாணவனாக வருகிறார். சக மாணவியாக ஸ்ரீதிவ்யா.
கௌதமின் முன்னாள் அசிஸ்டெண்ட் மணி நாகராஜ் இயக்கும் இந்தப் படம் சில காரணங்களால் தடைபட்டது. ஜீ.வி.பிரகாஷ் இரண்டாவதாக நடித்த டார்லிங் படம் முடிந்து திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், பென்சில் குறித்து எந்த தகவலும் இல்லாமலிருந்தது.
 
இந்நிலையில், ஃபெப்ரவரி மாதம் 14 -ஆம் தேதி காதலர் தினத்தன்று படத்தின் பாடல்களை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்