சி வி குமார் தயாரிப்பில் நடிக்கும் ஜி வி பிரகாஷ்… தலைப்பு அறிவிப்பு!

வியாழன், 2 டிசம்பர் 2021 (11:18 IST)
முன்னணி தயாரிப்பாளரான சி வி குமார் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் குறைந்த முதலீட்டில் அனைவரையும் கவரும் விதமாக படங்களை எடுத்து வெற்றி பெற்று தன் முத்திரையை பதித்தவர் தயாரிப்பாளர் சி வி குமார். ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் அவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவோடு இணைந்து இப்போது வரிசையாக படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.

அதில் ஒரு படமாக ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் ரெபெல் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு தொடங்கியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்