ஜி வி பிரகாஷின் 100 ஆவது படம் இதுதான்… வெளியான தகவல்!
புதன், 19 அக்டோபர் 2022 (16:28 IST)
ஜி வி பிரகாஷ் தமிழ் சினிமாவில் வெயில் படம் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளரானார்.
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் 6 தேசிய விருதுகளைப் பெற்றது. சூர்யா உள்பட படக்குழுவினர் பலருக்கு விருதுகள் கிடைத்தன.
இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளார்களாம். இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதான் ஜி வி பிரகாஷின் 100 ஆவது படமாக அமையும் என சொல்லப்படுகிறது.