ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜேஷ் இயக்கிவரும் கடவுள் இருக்கிறான் குமாரு படத்திலும் ஜீவா ஒரேயொரு காட்சியில் நடிக்கிறார். தீபாவளிக்கு இந்தப் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்திலும் ஏதாவது ஒரு பெரிய நடிகரை சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவைக்க எம்.ராஜேஷ் முடிவு செய்தார். அதன்படி, நடிகர் ஜீவாவை இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க எம்.ராஜேஷ் அழைப்பு விடுத்தார். எம்.ராஜேஷின் அழைப்பை ஜீவாவும் ஏற்று, இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம்.