ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடிய பவதாரிணி

வெள்ளி, 4 ஜூலை 2014 (20:24 IST)
ஜீ.வி.பிரகாஷ் இசையில் இரும்பு குதிரை படத்துக்காக டூயட் பாடல் ஒன்றை பவதாரிணி பாடினார். ஜீ.வி.பிரகாஷின் இசையில் அவர் பாடுவது இதுவே முதல் முறை.

இரும்பு குதிரையை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்து வருகிறது. யுவராஜ்போஸ் இயக்கம். அதர்வாரேஸ் வீரராக இதில் நடிக்கிறார். ஹீரோயின் ப்ரியா ஆனந்த். ராய் லட்சுமி இந்தப் படத்தில் ரேஸ் வீராங்கனையாக வருகிறார். அதற்காக தனது உடல் எடையையும் கணிசமாகக் குறைத்துள்ளார்.

ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்காக டூயட் பாடல் ஒன்றை கம்போஸ் செய்தார். பாடல் எழுதியவர் தாமரை. பவதாரிணியுடன் இணைந்து ஜீ.வி.பிரகாஷே இந்தப் பாடலைப் பாடி ஒலிப்பதிவு செய்தார். இந்தத் தகவலை ஜீ.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜீ.வி.பிரகாஷ் இசையில் பவதாரிணி பாடுவது இதுவே முதல்முறை.

வெப்துனியாவைப் படிக்கவும்