கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் நேற்று ரிலீஸான படம் ‘குலேபகாவலி’. ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரேவதி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ‘மொட்டை’ ராஜேந்திரன், ஆனந்தராஜ், மதுசூதன் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இருவரும் இசையமைத்துள்ளனர்.
இந்தப் படத்தின் புரமோஷனுக்காக, ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார் பிரபுதேவா. ‘விரைவில் தமிழில் படம் இயக்குவேன்’ என்று தெரிவித்துள்ள பிரபுதேவா, ‘விஜய் எப்போதுமே மாஸ் & கிளாஸ்’ எனப் பதிலளித்துள்ளார்.
‘நீங்கள் எத்தனை வயதில் இருந்து நடனமாடுகிறீர்கள்?’ என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள பிரபுதேவா, ‘ஆன் ஸ்கிரீனில் 16 வயது, ஸ்கிரீனுக்குப் பின்னால் பிறந்ததில் இருந்தே டான்ஸ் ஆடுவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.