கோயம்பேடு பகுதியில் நேற்று 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதும் உடனடியாக தமிழக அரசு கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. மேலும் கோயம்பேட்டில் காய்கறி சில்லரை வியாபாரம் செய்ய அனுமதி இல்லை என்றும், அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மட்டுமே சில்லரை வியாபாரிகள் காய்கறி வாங்கி செல்ல அனுமதி என்றும் அறிவித்திருந்தது. மேலும் கோயம்பெடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ மார்க்கெட் மற்றும் பழங்கள் அங்காடி நாளை முதல் மாதவரம் பேருந்து நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் தற்போது கோயம்பேடு சந்தை பகுதியில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் நேற்று இன்றும் என மொத்தம் 7 பேர் கொரோனாவால் கோயம்பேடு சந்தையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து காய்கறி வியாபாரிகளுடன் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இன்றும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது