துருவ நட்சத்திரம் படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்த சூர்யா, இனிமேல் கௌதம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பேயில்லை என்று கசப்புடன் அறிவித்தது நினைவிருக்கலாம். அந்த கசப்பை காக்க காக்க கொஞ்சம் தணித்திருக்கிறது.
காக்கா காக்க படம் வெளிவந்து நேற்றுடன் 13 வருடங்களானது. அதனை முன்னிட்டு ரசிகர்கள் காக்க காக்க நினைவுகளை பகிர்ந்திருந்தனர். சூர்யாவும் படம் குறித்து கருத்து கூறியிருந்தார். தனக்கும், ஜோதிகாவுக்கும் மிகவும் பிடித்த படம் என்றும், படம் தனது வாழ்க்கையையே மாற்றியதாகவும் கூறி கௌதமுக்கு அதற்காக நன்றி தெரிவித்திருந்தார்.