சிவகார்த்திகேயனுக்கு அதெல்லாம் சூச்சூபி...

புதன், 8 ஜூன் 2016 (15:13 IST)
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ரெமோ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவரது நண்பர் ராஜா தனது 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் மிகப் பிரமாண்டமாக இப்படம் தயாராகி வருகிறது.


 


சிவகார்த்திகேயன் பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கிறார். அதில் ஒன்று பெண் வேடம்.
 
இந்த பெண் வேடத்துக்கான டப்பிங்கை தானே பேசுவது என்று சிவகார்த்திகேயன் முடிவெடுத்து அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். 
 
சிவகார்த்திகேயன் தொலைக்காட்சிக்கு வந்ததே அவரது மிமிக்ரி திறமையால்தான். ரஜினி போன்று பேசும் அவரது திறமையே இன்றுவரை அவரை திரையுலகில் நிலைத்து நிற்க வைத்துள்ளது. அடிப்படையில் மிமிக்ரி கலைஞரான அவருக்கு பெண் குரலில் பேசுவது ஒரு விஷயமேயில்லை என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
 
ரெமோவுக்கு ஹாலிவுட் கலைஞர்கள் மேக்கப் பணியை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்