‘குற்றம் கடிதல்’ பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா நடித்துள்ள படம் ‘மகளிர் மட்டும்’. இந்தப் படத்துக்காக புல்லட் ஓட்ட கற்றுக் கொண்டுள்ளார் ஜோதிகா. ‘கைனடிக் ஓட்டுவதைவிட, புல்லட் ஓட்டுவது எளிதாகத்தான் இருக்கிறது’ என்கிறார் ஜோதிகா.
“ஆரம்பத்தில் சூர்யா தான் எனக்கு சொல்லித் தந்தார். அடையார் சாலையில் சில நாட்களுக்கு ஓட்டிப் பழகினேன். ஆனால், சூர்யாவுக்கு வேலை இருந்ததால், அதன்பின் பெண் பயிற்சியாளரைக் கொண்டு ஓட்டப் பழகினேன். பைக் ஓட்ட கற்றுக்கொள்ள மூன்று நாட்கள் போதும். ஆனால், இந்த ட்ராஃபிக்கில் ஓட்டும் தன்னம்பிக்கையைப் பெற மூன்று மாதங்கள் தேவை” என்று கூறியுள்ளார் ஜோதிகா.
இப்போதெல்லாம் குழந்தைகளை புல்லட்டிலேயே ஸ்கூலுக்கு அழைத்துச் செல்கிறார் ஜோதிகா. இதில், குழந்தைகளுக்கு ஏக குஷியாம். அதுவும் குறிப்பாக, பெண் குழந்தை தியாவுக்கு ரொம்பவே பெருமையாம்.