ரஞ்சித் கபாலி படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
மெட்ராஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஸ்டுடியோ கிரீனுக்காக சூர்யா நடிக்கும் படத்தை ரஞ்சித் இயக்குவதாக இருந்தது. கதை, திரைக்கதை தயாரான நிலையில், ரஜினி பட வாய்ப்புவர, சூர்யா படத்தை நிறுத்திவிட்டு கபாலிக்கு வந்தார். கபாலி விரைவில் வெளியாகவிருக்கிறது.
கபாலிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவதாக ரஞ்சித் கூறியுள்ளார். ஏற்கனவே ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதால் சிங்கம் 3 முடிந்ததும் சூர்யா ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.