’’சுல்தான்'’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு…கார்த்தி ரசிகர்கள் உற்சாகம்

வெள்ளி, 23 அக்டோபர் 2020 (18:13 IST)
கார்த்தி நடிப்பில் உருவாகி வந்த ’சுல்தான்’ திரைப்படம் கடந்த 3 ஆண்டுகளாக தாமதமாகி வரும் நிலையில் சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் , இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 26 ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா விடுமுறையில் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளும் 90% முடிந்துவிட்டது என தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்திற்கு இந்த படம் சென்றுள்ளது

இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் கார்த்தி முதன் முதலில் தனது பகுதியின் டப்பிங் பணியை பேசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் டப்பிங் பணி முடிவடைந்து சென்சாருக்கு செல்லும் என்றும் வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தி ஜோடியாக இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 26 ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#Sulthan first look on 26th

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்