நடிகர் சங்கம், திருட்டு டிவிடி என்று இரண்டுபுறம் சிலம்பாட்டம் நடத்திக் கொண்டே நடிக்கவும் செய்கிறார் விஷால். தற்போது சுராஜ் இயக்கும் கத்திச்சண்டை படத்தில் அவர் நடித்து வருகிறார். நேற்று சண்டைக் காட்சியை படமாக்கிய போது, எதிர்பாராமல் விழுந்த அடியில் விஷாலின் தோள்பட்டை மூட்டு விலகியதாக கூறப்படுகிறது. வலியால் துடித்த அவரை அள்ளிக் கொண்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.