பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான என் கே விஸ்வநாதன் மாரடைப்பால் மரணம்!

புதன், 26 ஏப்ரல் 2017 (10:15 IST)
மூத்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருமாக இருந்தவர் என் கே விஸ்வநாதன், அவர் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. 1970-களில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர்.


கமல் நடித்த சட்டம் என் கையில், கடல் மீன்கள், கல்யாணராமன், மீண்டும் கோகிலா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
 
இயக்குநர் இராம நாராயணனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்தார் என்கே விஸ்வநாதன். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாண்டி நாட்டுத் தங்கம், எங்க ஊரு காவக்காரன், இணைந்த கைகள், நாடோடி  பாட்டுக்காரன், பெரிய வீட்டு பண்ணக்காரன், பெரிய மருது, புதுப்பட்டி பொன்னுத்தாயி, ஜெகன் மோகினி உள்ளிட்ட பல வெற்றிப்  படங்களை இயக்கியுள்ளார். 
 
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் என்.கே.விஸ்வநாதன் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு  ராஜேஸ்வரி என்ற மகள் இருக்கிறார். மறைந்த என் கே விஸ்வநாதனக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்