’தளபதி 66ஐ அடுத்து ‘தளபதி 67’ படத்திலும் பிரபல ஹீரோ தான் வில்லன்!
வியாழன், 10 மார்ச் 2022 (11:58 IST)
தளபதி விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்தின் விவேகம் படத்தில் வில்லனாக நடித்தவர் தற்போது விஜய் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது
ஏற்கனவே லோகேஷ்கனகராஜ் இயக்கிய கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் அவரது நடிப்பு சூப்பராக இருந்ததால் அதே தளபதி 67 படத்தில் அவரையே வில்லனாக்க லோகேஷ் முடிவு செய்துவிட்டதாகவும் இதுகுறித்து அவரிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் கூறப்படுகிறது
விஜய்யின் அடுத்தடுத்த திரைப்படங்களில் பிரபல ஹீரோக்கள் வில்லன்களாக நடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது