மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள மாலிக் என்ற எதிர்பார்ப்புக்குரிய படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மே மாதம் 13 ஆம் தேதி மாலிக் படம் உலகமெங்கும் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.