ஒரு விவசாயி கூட சாக விடமாட்டேன்; கறவை மாடுகள் தந்து உறுதி ஏற்ற லாரன்ஸ்!

சனி, 1 ஏப்ரல் 2017 (17:03 IST)
தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்ட்டுள்ளனர். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் 250க்கும்  மேற்ப்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நல உதவிகள் வழங்கும் விழாவில் லாரன்ஸ்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 
அப்போது அவர், தற்கொலை செய்து கொண்ட 25 விவசாய குடும்பத்தினருக்கு தலா 2 கறவை மாடுகள் மற்றும் நிதி உதவி வழங்கினார். மேலும் எனக்கு தெய்வங்கள் மூன்று என்றும், அதில் முதலாவது எனது அம்மா, இரண்டாவது ரசிகர்கள், மூன்றாவது விவசாயிகள் என கூறியுள்ளார்.
 
பொதுமக்களும் விவசாயிகளுக்கு உதவ முன் வரவேண்டும் என்றும், அதன் முதற்கட்டமாக நான் இரண்டு விவசாய மனைவிகளின் அடகு வைக்கப்பட்ட தாலிகொடியை மீட்டு கொடுத்துள்ளேன் என்றும், நான் நடித்த சிவலிங்கா படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விவசாயிகளுக்கு கொடுக்க உள்ளேன். தலைவனாக அல்ல, தொண்டனாகவே சேவை செய்ய  விரும்புகிறேன் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்