சீரியல் நடிகை எதிர்நீச்சல் மதுமிதா சென்ற கார் விபத்து… போலீஸார் தீவிர விசாரணை!

vinoth

புதன், 28 பிப்ரவரி 2024 (08:17 IST)
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் இந்த சீரியல் 700 எபிசோட்களை தாண்டி சென்று வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் மையக் கதாபாத்திரமான ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா.

இந்த சீரியல் வைரல் ஹிட் ஆனதை அடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் லட்சக் கணக்கான ரசிகர்கள் உருவாகி அவரை பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தன்னுடைய நண்பர் ஒருவரோடு காரில் சோழிங்கநல்லூர் சாலையில் சென்ற போது எதிரே இரு சக்கரவாகனத்தில் வந்த காவலர் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் காவலருக்கு அடிபட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மதுமிதா மற்றும் அவரது நண்பர் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுமிதா வந்த கார் தவறான பாதையில் வந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்