அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால், தற்போது இப்படத்தை வெளியிடத் தயாராகி வந்தது படக்குழு. ஆனால், அதில் சில சிக்கல்கள்கள் உள்ளன. இப்படத்தின் தயாரிப்பாளராக இருக்கும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் 'கயல்', 'மாப்ள சிங்கம்' மற்றும் 'கொடி' படங்களுக்காக வாங்கிய கடன்களில் உள்ள பாக்கிகள், கெளதம் மேனன் தயாரிப்பில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்கு வாங்கிய கடன்களில் உள்ள பாக்கிகள் என அனைத்துமே 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை ரிலீஸ் செய்வதற்கான பேச்சுவார்த்தை, விநியோகஸ்தர்கள் சங்கத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம் வெளியானால் மட்டுமே, தங்களுக்கான பணம் கிடைக்கும் என்பதால் பல பைனான்சியர்களும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இதில் நல்ல முடிவு எட்டப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது
'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை மார்ச் 28-ம் தேதி வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்துள்ளனர். அதற்குள் பேச்சுவார்த்தையை முழுமையாக முடித்து, தடையில்லாச் சான்றிதழ் வாங்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.