துல்கர் சல்மான் படத்தில் நடிக்கும் ஜான் விஜய்

திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (15:04 IST)
ஜான் விஜய் மலையாளத்தில் நடிப்பது புதிதல்ல. அயோபின்டெ புத்தகம், பேச்சிலர் பார்ட்டி படங்களில் நடித்துள்ளார்.


 


இவையிரண்டும் அமல் நீரத் இயக்கிய படங்கள் (பேச்சிலர் பார்ட்டி கொரிய படத்தின் அப்பட்ட தழுவல்).
 
அமல் நீரத் அடுத்து துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை இயக்குகிறார். 
 
இந்தப் படத்திலும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஜான் விஜய்யை அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். கபாலிக்குப் பிறகு ஜான் விஜய்யின் பெயரும், முகமும் மலையாளத்தில் இன்னும் அதிகமாக பிரபலமடைந்திருப்பது முக்கியமானது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்