இந்த வருடம் இந்த படம்தான் பாலிவுட்டுக்கு ஆறுதல்… மைல் கல் வசூலை நோக்கி திரிஷ்யம் 2

செவ்வாய், 29 நவம்பர் 2022 (08:27 IST)
2013 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இந்நிலையில் திரிஷ்யம் இரண்டாம் பாகம்  8 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியானது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது.

இதையடுத்து இரண்டாம் பாகத்தையும் இந்தியில் ரீமேக் செய்தனர். இந்த ரீமேக்கில் அஜய் தேவ்கன் , தபு மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடர்ந்து பாலிவுட் படங்கள் சொதப்பி வரும் நிலையில் திரிஷ்யம் 2 திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. வெளியாகி 10 நாட்களில் 141 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. விரைவில் 200 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்