பாலிவுட்டுக்கு நம்பிக்கைக் கொடுத்த திரிஷ்யம் 2… குவியும் வசூல்!

திங்கள், 21 நவம்பர் 2022 (09:24 IST)
2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இந்நிலையில்  5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியானது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது.

இதையடுத்து இரண்டாம் பாகத்தையும் இந்தியில் ரீமேக் செய்தனர். இந்த ரீமேக்கில் அஜய் தேவ்கன் , தபு மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனது.

இதையடுத்து தொடர்ந்து பாலிவுட் படங்கள் மோசமான வசூலைப் பெற்று வரும் நிலையில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இரண்டு நாட்களில் இந்த படம் 36 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்