தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திடீரென நடிகை அபிராமி கட்சி தொடங்கியது போல வெளியிட்டுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் அபிராமி. இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, களவு, வல்லான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில் திராவிட வெற்றிக் கழகம் (DVK) என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அபிராமியை மக்கள் வரவேற்பது போல புகைப்படமும் இடம் பெற்றுள்ளதுடன், அறிவிப்பு விரைவில் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் பதிவிட்டுள்ள அபிராமி “நீங்க சொல்றத கேட்க நாலு பேரு இருந்தாங்கன்னா, நல்லதையே சொல்லுங்க!
நீங்க செய்றத பாக்க நாலு பேர் இருந்தாங்கன்னா,
நல்லதையே செய்ங்க… களத்தில் சந்திப்போம்… Announcement soon…” என பதிவிட்டுள்ளார்.
இது திரைப்பட போஸ்டரா அல்லது உண்மையாகவே அபிராமி அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K