மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் இப்போது அந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த பட்டியலில் பல இயக்குனர்கள் பெயர் உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இதுபற்றி மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறனை அழைத்த விஜய் அடுத்த படத்தை இயக்க முடியுமா எனக் கேட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. இதனால் வெற்றிமாறன் மகிழ்ச்சி அடைந்தாலும், தான் 3 படங்களுக்கான அட்வான்ஸ் வாங்கிவிட்டதால் தன்னால் செய்ய முடியாத சூழல் உள்ளார் என வருத்தத்தோடு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.