இயக்குனர் சுந்தர் சி யின் உதவியாளரும் மூவேந்தர், குங்குமப்பொட்டு கவுண்டர், தலைநகரம், படிக்காதவன், மருதமலை உள்ளிட்ட ஏகப்பட்ட வெற்றி படங்களை இயக்கியவர் சுராஜ். அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பெரியளவில் கவனம் பெறவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் தான் இயக்கிய மருதமலை படத்தின் கதையை முதலில் விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு கூறிய சந்தர்ப்பங்கள் பற்றி பேசியுள்ளார். அதில் அஜித்துக்கு இந்த கதையை சொன்னதாகவும், அவருக்கு கதை பிடித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.