செம கியூட் சம்பவம்: வாத்தி கம்மிங் ஒத்து... பட்டைய கிளப்பும் இயக்குனர் மகள்!

செவ்வாய், 19 மே 2020 (12:26 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே வேற லெவல் ஹிட் அடித்துவிட்டது.

இந்த பாடல்களை தியேட்டரில் பார்ப்பதற்காகவே படையெடுக்கும் கூட்டம் ஏராளம் உண்டு. இந்நிலையில் தற்போது "வாத்தி கம்மிங்" பாடலுக்கு நிறைய பேர் நடனமாடி வீடியோ வெளியிட்டு வெறித்தனமான ஹிட் ஆக்கியுள்ளார். அந்த லிஸ்டில் தற்போது ஆடை பட இயக்குனர் ரத்னகுமாரின் மகள் குரலினியல் இணைந்துள்ளார். செம கியூட் ஸ்டெப் போட்டு அசத்தும் இந்த கியூட் பாப்பா இணையத்தில் வைரலாகி வருகிறார். 

As @LMKMovieManiac asked for. Here is #Master cover. My Daughter Kuraliniyal moving her legs for #VaathiComing at midnight

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்