வேண்டாம் விஜய் சார்.. அந்த முடிவு எடுக்காதீங்க… இயக்குனர் பேரரசு கொடுத்த அட்வைஸ்!

vinoth

சனி, 3 பிப்ரவரி 2024 (10:07 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், நேற்று தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் (க்-இல்லை என ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது) என பெயரிடப்பட்டுள்ளது.

இது சம்மந்தமான அறிவிப்பில் தான் ஏற்கனவே ஒத்துக்கொண்ட இன்னும் ஒரு படத்தை மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பின்னர் முழுமையாக மக்கள் சேவைக்கு வரவுள்ளதாகக் கூறியிருந்தார். இப்போது The GOAT திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், இதன் பின்னர் தனது 69 ஆவது படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

இந்நிலையில் விஜய்யை வைத்து திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகிய படங்களை இயக்கிய பேரரசு விஜய் சினிமாவில் இருந்து விலகுவது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “வேண்டாம் விஜய் சார். எம் ஜி ஆர் முதலமைச்சராக பொறுப்பேற்கும் முதல் நாள் வரை சினிமா ஷூட்டிங்கில் இருந்தார்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் விஜய் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்