உலகநாயகன் கமலஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்யும் பெரும்பாலான டிவிட்டுக்கள் சாதாரண மக்களுக்கு புரிவதில்லை என்றும் அதற்கு யாராவது விளக்க உரை அளித்தால் தான் புரியும் என்றும் கேலியாகவும் கிண்டலாகவும் கூறப்படுவது உண்டு. ஆனால் உண்மையில் அவருடைய டுவிட்டுகளை புரிந்தவர்கள் அந்த அதன் பொருளை உணர்ந்து ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கமல் பாணியில் புரியாத டுவிட் ஒன்றை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது ட்விட்டரில் நேற்று பதிவு செய்தார். இந்த டுவிட்டில் உள்ள ஆடுகள், புற்கள், அமிர்தம் ஆகியவை எதைக் குறிக்கின்றது என்பது புரியாமல் தவித்த நெட்டிசன்கள், அவரவர் இஷ்டத்திற்கு தங்களுடைய பாணியில் அந்த டூவிட்டிக்கு அர்த்தம் கற்பித்தனர்
இக்கருத்தை அண்ணன் திருமாவுக்கு எதிராக திசை திருப்பும் வேலையை விட்டு விட்டு, எல்லா அரசியல் கட்சிகளும் தலித் மக்களை எப்படி அதிகாரத்திற்க்காக கையாளுகிறார்கள் என்கிற உண்மையை உணருங்கள். ஆடுகள்: தலித் மக்கள், புற்கள்: கட்சிகளின் முழக்கங்கள் மீதான நம்பிக்கைகள்