சூர்யா அல்லது விஜய்… மறைந்த இயக்குனரின் தமிழ் பட ஆசை !

வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (17:48 IST)
சமீபத்தில் மறைந்த பாலிவுட் இயக்குனர் நிஷிகாந்த் காமத் தமிழில் ஒரு படம் இயக்கி அதில் விஜய் அல்லது சூர்யாவை இயக்கவேண்டும் என ஆசையோடு இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தி சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் நிஷிகாந்த் காமத். இவர் திரிஷ்யம் மற்றும் காக்க காக்க ஆகிய படங்களின் இந்தி ரீமேக்கை அங்கு இயக்கியவர். அதுமட்டுமில்லாமல் தமிழில் மாதவன் நடித்த எவனோ ஒருவன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

இவர் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவர் ஒரு தமிழ்ப் படம் எடுக்க நினைத்து கடைசி வரை அந்த ஆசை நிறைவேறாமலேயே மறைந்துவிட்டார். மராத்தியில் ஹிட் அடித்த பஹாரி என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் விஜய் அல்லது சூர்யா இருவரில் ஒருவரை நடிக்கவேண்டும் என்ற ஆசையில் இருந்தாராம். ஆனால் கடைசி வரை அந்த ஆசை நிறைவேறவே இல்லை.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்