ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வில்லனாக ஜித்தன் ரமேஷ்! திருப்புமுனை தருமா?

சனி, 23 அக்டோபர் 2021 (14:56 IST)
இயக்குனர் நெல்சன் இயக்க உள்ள புதிய படத்தில் ஜித்தன் ரமேஷ் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தமிழில் இதுவரை இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். ஒரு நாள் கூத்து மற்றும் மான்ஸ்டர் என அவர் இயக்கிய இரண்டு படங்களுமே வெற்றிபடம்தான். அதிலும் மான்ஸ்டர் திரைப்படம் 18+ ரசிகர்களின் நடிகராக இருந்த எஸ் ஜே சூர்யா குழந்தைகளுக்கும் பிடித்த நடிகராக்கியது.

இந்நிலையில் மான்ஸ்டர் படத்துக்குப் பின்னர் நெல்சன் இயக்கும் அடுத்த படத்தை எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார். இந்த படத்தில் மையக் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்