படப்பிடிப்புக்கு அனுமதி: அரசுக்கு இயக்குனர் சேரனின் இன்னொரு வேண்டுகோள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (15:20 IST)
ஐந்து மாதங்களுக்குப் பின்னர் ஒரு வழியாக மத்திய அரசு சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துவிட்டது என்பது குறிப்பிடதக்கது. சினிமா படப்பிடிப்புகள் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கிய உள்ள மத்திய அரசு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது 
 
படப்பிடிப்பில் உள்ளவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளைக் கழுவவேண்டும், எச்சில் துப்பக்கூடாது, குறைந்த அளவு ஊழியர்களை வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும், வெளிப்புறப் படப்பிடிப்பில் எக்காரணத்தைக் கொண்டும் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வழிகாட்டு நெறி முறைகளின் அடிப்படையில் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்நிலையில் இயக்குனர் சேரன் தனது சமூக வலைத்தளத்தில் தமிழக அரசுக்கு மேலும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: முதல்வர் மற்றும் செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர்களுக்கு ஒரு வேண்டுகோள். திரைத்துறை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதையும், 70% சிறுபடத்தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில்கொண்டு படப்பிடிப்பின் அனுமதிக்கான செலவுகளையும், வரிச்சலுகைகளையும் நிலமை சீராகும் வரை முற்றிலுமாக நீக்கித்தருமாறு வேண்டுகிறேன்’ என்று சேரன் தனது டுவிட்டில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்