சேது பட ஹீரோயினை கண்டபடி திட்டிய இயக்குனர் பாலா!

வியாழன், 1 ஜூலை 2021 (15:40 IST)
இயக்குனர் பாலா சேது படத்தின் கதாநாயகி அபிதாவை ஷூட்டிங் ஸ்பாட்டில் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் புறக்கணிக்கப்பட்டு பின்னர் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று சேது. அந்த படத்தின் மூலமாகதான் தமிழ் சினிமாவுக்கு பாலாவும், விக்ரம்மும் கிடைத்தார்கள். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த அபிதா அந்த ஒரு படத்துக்குப் பின் காணாமல் போனார். பின்னர் சீரியல்களில் பிரபலமாக நடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ‘சேது படத்தின் படப்பிடிப்பின் போது பரதநாட்டியக் காட்சிகளை எடுக்கும் போது பல முறை ரீ டேக் போனது. இதனால் கடுப்பான பாலா ‘உன்னை கதாநாயகியாக போட்டதுக்கு என்னை நானே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்’ என கோபாமாக பேசினாராம்’. இதனால் அபிதா இந்த படத்தில் நடிக்க மாட்டே என தனது தாயாரிடம் அழுது புலம்பியதாகக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்