எவனும் புத்தனில்லை எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் ‘ஆண், பெண் ஈர்ப்பு என்பது மனித இனத்தின் அடிப்படையான குணங்களில் ஒன்று. அந்த ஈர்ப்புக்கு ஒரு வரைமுறை உண்டு. அந்த வரைமுறை தாண்டப்பட்டால் அதை அப்போதே கண்டித்திருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு கள்ளத்தொடர்பு வைத்திருந்தாலே தவறு இல்லை என தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்படி இருக்கையில் மீடூ மட்டும் எப்படி தவறாகும்?’ என சின்மயிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் மி டூ குறித்து அவர் கூறியதாவது ‘இதை ஒரு பெரிய பிரச்சனையாக அனைவரும் ஊதிப் பெருக்குகிறார்கள். அப்படி எல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை. நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையே தவறில்லை எனக்கூறியுள்ளது. இதைவிட கள்ளக்காதல் ஒன்றும் தவறில்லை. இப்படி இருக்கையில் மிடூ மூலம் தப்பு சொல்லலாமா?. சின்மயி உலகில் உள்ள எல்லா ஆண்களையும் திருத்தி விடுவாரா?’ எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆர் வி உதயக்குமார் பொன்னுமனி, சின்னக்கவுண்டர், எஜமான் போன்ற பலப் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.