மீடூ-வில் சிக்கிய பிரபலங்களின் முகத்திரை கிழியட்டும் - அனிருத்

சனி, 27 அக்டோபர் 2018 (16:16 IST)
பாலிவுட் சினிமாவில் தொடங்கி கோலிவுட் வரை சமீப கலங்களளாக மீடூ பாலியல் விகாரத்தில் சிக்கிய பிரபலங்களின் முகங்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, வைரமுத்து - சின்மயி விவகாரம். அதோடு பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டோரின் குறுஞ்செய்திகளை ட்விட்டரில் தொடர்ந்து வெளியிட்டும் வருகிறார் பாடகி  சின்மயி. 
 
பாலியல் புகாரில் சிக்கிய பிரபலன்களான தியாகராஜன், அர்ஜூன், இயக்குநர் சுசி கணேசன், பாடகர் கார்த்திக் ஆகியோர் இந்த சர்ச்சையில் சிக்கி தவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், இளம் இசையமைப்பாளர் அனிருத், மீ டூ இயக்கத்தை ஆதரிப்பதாகவும், வேலை செய்யும் இடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல்களைப் பற்றி பெண்கள் தைரியமாக பொதுவெளியில் வாய் திறப்பது பாராட்டுக்குரிய விஷயம் என்றும். இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பல பிரபலங்களின் முகத்திரை கிழியும், எனவும் அனிருத் கருத்து தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்