விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’.. செம்ம வீடியோவை வெளியிட்ட கவுதம் மேனன்..! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சனி, 23 செப்டம்பர் 2023 (11:16 IST)
விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. 
 
இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி முழுமை பெற்றது. 
 
இந்த நிலையில் நேற்று இந்த படம் சென்சாரில் யுஏ சான்றிதழ் பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரம் திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பின்னர் இந்த படம் ரிலீசாக உள்ளதை அடுத்து தீபாவளி படங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. 
 
இருப்பினும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இன்று வெளியாகி உள்ள வீடியோ அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்