விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரை தொடர்புகொள்ள முடியவில்லை - இஸ்ரோ

வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (20:48 IST)
விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ள    முடியவில்லை என  இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீகரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமான கடந்த மாதம் 23  ஆம் தேதியன்று ஏவப்பட்டு, சந்திரனின் தென்துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்தது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்து, பிரக்யான், விக்ரம்லேண்டர் ஆகியவை பல புகைப்படங்கள் எடுத்து அனுப்பி, தனிமங்கள், ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்தது.

இந்த நிலையில்,  நிலவில் கடந்த 21 ஆம் தேதியுடன் இரவுக் காலம் முடிந்த நிலையில், சந்திரயான் 3 பிரக்யான் ரோவரை மீண்டும் உயிர்பிக்கும் பணி நடந்து வரும் நிலையில், விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்பு கொண்டனர். ஆனால்  முடியவில்லை என்று என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்