துருவநட்சத்திரம் படப்பிடிப்பு நிறுத்தம்...?

புதன், 8 பிப்ரவரி 2017 (16:06 IST)
சம்பள விவகாரம் காரணமாக துருநட்சத்திரம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 

கௌதம் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம், துருவநட்சத்திரம். இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட போதே சம்பள விஷயத்தில் விக்ரம் காறாராக பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அட்வான்ஸ் தொகை மட்டுமே விக்ரமுக்கு தரப்பட்டுள்ளதாகவும், அடுத்த பேமெண்ட் வராததால் அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம், இதனை படக்குழு மறுத்துள்ளது. படப்பிடிப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதில் எது உண்மையோ... வருகிற 10 -ஆம் தேதி முதல் விஜய் சந்தர் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளார் விக்ரம். இது மட்டும் 100 சதவீத உண்மை.

வெப்துனியாவைப் படிக்கவும்