LGM பட தோல்வியால் தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்கிறதா தோனி பட நிறுவனம்?

திங்கள், 27 நவம்பர் 2023 (07:30 IST)
ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்த எல் ஜி எம் படததை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

வசூல் ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தங்கள் நிறுவனம் அடுத்து எந்த தமிழ் படத்தை தயாரிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாம்.

தமிழ் சினிமாவில் களமிறங்கிய இந்த நிறுவனம் முதலில் விஜய்யை வைத்துதான் படம் தயாரிக்க திட்டமிட்டது. ஆனால் விஜய் கால்ஷீட் கிடைக்காததால் முதல் படமாக எல் ஜி எம் படத்தை எடுத்தது. ஆனால் அந்த படத்தின் தோல்வியால் அடுத்த சில ஆண்டுகளுக்கு எந்த படத்தையும் தயாரிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்