’லியோ’ படத்தில் தனுஷ் இணைகிறாரா? வேற லெவல் சம்பவம் செய்யும் லோகேஷ்..!

புதன், 5 ஜூலை 2023 (08:04 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த படத்தில் தொடர்ச்சியாக பிரபலங்கள் இணைந்து கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
 
ஏற்கனவே இந்த படத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் ராம்சரண் தேஜா ஆகியோர் இணைந்துள்ளதாக நேற்று தகவல் வெளியான நிலையில் தற்போது தனுஷ் இந்த படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. 
 
’லியோ’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் மட்டும் நடிக்க ஒரு மாஸ் நடிகர் தேவைப்பட்டதாகவும் அதற்காக தனுஷிடம் லோகேஷ் கனகராஜ் அணுகியதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் முதல்முறையாக விஜய் மற்றும் தனுஷ் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படம் என்ற பெயரை பெற்றுள்ள நிலையில் தற்போது மேலும் பிரபலங்கள் இணைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்