நடிகரான தனுஷ், பவர் பாண்டி மூலம் இயக்குநராகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார். இதை அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது.
பாகுபலி போன்ற சரித்திரக்கதையைத்தான் அவர் படமாக்கப் போவதாக சொன்னார்கள். தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவோடு, தனுஷும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அந்த படம் கைவிடப்பட்டது.