கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் தனுஷுடன் அல் பசினோ...?

திங்கள், 24 அக்டோபர் 2016 (17:56 IST)
கார்த்திக் சுப்பாராஜின் அடுத்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் நடிக்க அல் பசினோவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 
கார்த்திக் சுப்பாராஜின் புதிய படத்தின் பெரும்பாலான காட்சிகள் யுஎஸ்ஸில் படமாக உள்ளன. படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒரு அமெரிக்கர் தேவை. அந்த வேடத்தில் நடிக்க முதலில் மோர்கன் ப்ரீமேனை அணுகியுள்ளனர். பில காரணங்களால் மோர்கன் ப்ரீமேன் நடிக்கவில்லை.
 
அதனால் அவருக்குப் பதில் அல் பசினோவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


 

வெப்துனியாவைப் படிக்கவும்