இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றியுள்ள தனுஷ் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார் தனுஷ்.
இதையடுத்து தனுஷ் மூன்றாவதாக ஒரு படத்தையும் இயக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் கதாநாயகனாக அறிமுகமாக, தனுஷ் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். தன்னுடைய 50 ஆவது படத்தின் ஷூட்டிங் முடிந்த சில தினங்களிலேயே இப்போது தனுஷ் இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.