வரலட்சுமியின் 'வெல்வெட் நகரம்' டிரைலரை ரிலீஸ் செய்வது யார் தெரியுமா?

வியாழன், 22 நவம்பர் 2018 (18:04 IST)
நடிகை வரலட்சுமி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'சர்கார்' மற்றும் 'சண்டக்கோழி 2' ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் வரும் டிசம்பரில் அவர் நடித்த இன்னொரு படமான 'மாரி 2' ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் வரலட்சுமி பத்திரிகையாளராக நடித்த 'வெல்வெட் நகரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியுந்தருவாயில் உள்ளது. இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரைலரை பிரபல நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

மனோஜ்குமார் நடராஜன் இயக்கி வரும் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையம்சம் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்