மேலும் இரண்டு தெலுங்கு இயக்குனர்களோடு கூட்டணியமைக்கும் தனுஷ்!

vinoth

திங்கள், 6 மே 2024 (07:14 IST)
தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் -ஐ தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கும் குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்து இரண்டு தெலுங்கு இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க தனுஷ் சம்மதம் சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விராட பர்வம் படத்தை இயக்கிய வேணு உடுகுலா இயக்கத்தில் பீப்பிள் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படத்திலும், அடுத்து ஸ்ரீகாரம் படத்தின் இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க தனுஷ் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்