“ரஜினியாக நடிப்பேன்” – தனுஷ்

சனி, 29 ஜூலை 2017 (12:22 IST)
‘ரஜினி வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என தனுஷ் கூறியுள்ளார்.


 

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டில், சாக்ஷி அகர்வால் என 4 ஹீரோயின்கள் இதில் நடிக்கின்றனர். மும்பையைத் தொடர்ந்து தற்போது சென்னைக்கு அருகிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தைத் தயாரிக்கும் தனுஷ், சின்ன வயது ரஜினியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இதுகுறித்து தனுஷிடம் கேட்டபோது, “பா.இரஞ்சித் அப்படி இன்னும் என்னை அழைக்கவில்லை” என்றார். இந்நிலையில், ‘யாருடைய சுயசரிதையிலாவது நடிக்க விரும்பினால், யார் வேடத்தில் நடிப்பீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. “அப்படியொரு விஷயம் நடந்தால், நிச்சயமாக ரஜினி சார் வேடத்தில் தான் நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.

வெப்துனியாவைப் படிக்கவும்